தேசிய செய்திகள்

‘எனக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது’ பஞ்சாப் ரெயில் விபத்தில் ரெயில் ஓட்டுநரிடம் விசாரணை + "||" + Amritsar Train Driver Says He Got All-Clear To Move On Detained By Cops

‘எனக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது’ பஞ்சாப் ரெயில் விபத்தில் ரெயில் ஓட்டுநரிடம் விசாரணை

‘எனக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது’ பஞ்சாப் ரெயில் விபத்தில் ரெயில் ஓட்டுநரிடம் விசாரணை
‘எனக்கு கிரீன் சிக்னல்தான் கொடுக்கப்பட்டது,’ என பஞ்சாப் ரெயில் விபத்தில் கைது செய்யப்பட்ட ரெயில் ஓட்டுநர் கூறியுள்ளார்.
அமர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா கொண்டாட்ட நிகழ்ச்சி ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள  மைதானத்தில் நடந்தது. இதில் பஞ்சாப் உள்ளாட்சித்துறை மந்திரி நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வழக்கம்போல், அங்கு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பட்டாசுகள் வெடித்த போது, தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் ஏறிச்சென்றது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ரெயில்வே தண்டவாளம் பகுதி அனுமதியளிக்கப்படாத பகுதியாகும். நிர்வாகத்திடம் அனுமதி  கேட்கப்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விபத்துதொடர்பாக கைது செய்யப்பட்ட ரெயில் ஓட்டுநர் ‘எனக்கு கிரீன் சிக்னல்தான் கொடுக்கப்பட்டது,’ என தெரிவித்துள்ளார். 
ரெயிலுக்கு கிரீன் சிக்னல்தான் கொடுக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான மக்கள் ரெயில்வே தண்டவாளத்தில் நிற்கிறார்கள் என்பது தொடர்பாக எனக்கு எந்தஒரு ஐடியாவும் கிடையாது என தெரிவித்துள்ளார். அவரிடம் பஞ்சாப் போலீசும், ரெயில்வே போலீசும் விசாரித்துள்ளது. விபத்து நேரிட்ட போது புகைமூட்டம் இருந்ததாகவும், பட்டாசு சத்தம் மற்றும் மக்கள் கோஷமும் இருந்துள்ளது என கூறப்படுகிறது.

இதற்கிடையே அனுமதியின்றி ரெயில்வே பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ரெயில்வே பாலத்தில் ஆபத்தான பயணம் வெண்ணாற்றில் பாலம் கட்டப்படுமா? 40 ஆண்டு கால கனவு நனவாகுமா?
நீடாமங்கலம் அருகே ரெயில்வே பாலத்தில் கிராம மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். வெண்ணாற்றில் பாலம் கட்ட வேண்டும் என்பது கிராம மக்களின் கனவாக உள்ளது. இந்த கனவு நனவாகுமா? என்ற கேள்விக்கு அதிகாரிகள்தான் விடை அளிக்க வேண்டும்.
2. குஜராத் மாநிலத்தில் இருந்து பழமையான டீசல் ரெயில் என்ஜின் திருச்சி அருங்காட்சியகம் வந்தது
குஜராத் மாநிலத்தில் இருந்து பழமையான டீசல் ரெயில் என்ஜின் திருச்சி வந்தது. இதனை திருச்சி ரெயில்வே அருங்காட்சியகத்தில் புதுப்பொலியுடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
3. திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி பயன்பாட்டுக்கு வந்தது
முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
4. ரெயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு 15-ந் தேதி போராட்டம் நடத்த முடிவு
சேலம் தாதம்பட்டியில் ரெயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக வருகிற 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
5. பாதுகாவலர்களை தாக்கி ரெயில்வேக்கு சொந்தமான ரூ.16½ லட்சம் கொள்ளை
மான்கூர்டில் பாதுகாவலர்களை தாக்கி வேனில் இருந்த ரெயில்வேயின் ரூ.16½ லட்சத்தை கொள்ளையடித்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.