சபரிமலையில் 50 வயது தமிழக பெண் பக்தர் தரிசனம்; எந்தஒரு பதற்றமும் கிடையாது -பத்தினம்திட்டா ஆட்சியர்


சபரிமலையில் 50 வயது தமிழக பெண் பக்தர் தரிசனம்; எந்தஒரு பதற்றமும் கிடையாது -பத்தினம்திட்டா ஆட்சியர்
x
தினத்தந்தி 20 Oct 2018 9:59 AM GMT (Updated: 20 Oct 2018 9:59 AM GMT)

சபரிமலைக்கு பெண் பக்தர் தரிசனத்திற்காக வந்தார். சில செய்தி சேனல்கள் அவரை பின் தொடர்ந்தது. அங்கு கூட்டம் கூடியது, அதுதான் பிரச்சனை. சன்னிதானத்தில் எந்தஒரு பதற்றமும் கிடையாது என பத்தினம்திட்டா ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

பம்பை,

சபரிமலையில் பெண்களுக்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில் திருச்சியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் குடும்பத்துடன் சபரிமலைக்கு சென்றுள்ளார். இப்போது எதிர்ப்பு நிலவுவதால் அவருக்கும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியது. பின்னர் அவர் தன்னுடைய வயதை உறுதி செய்துவிட்டு 18 படியை ஏறி சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் சன்னிதானம் பகுதியில் இன்றும் பதற்றமான நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

சபரிமலையில் போராட்டம் காரணமாக ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதற்றம் என்பதை பத்தினம்திட்டா ஆட்சியர் மறுத்துள்ளார்.

பத்தினம்திட்டா ஆட்சியர் பிபி நூத் பேசுகையில், “பெண் தரிசனத்திற்காக சன்னிதானம் வந்தார். சில செய்தி சேனல்கள் அவர்களை பின் தொடர்ந்தது. இதனால் அங்கு கூட்டம் கூடியது. அதுதான் பிரச்சனை.” என்று கூறியுள்ளார். இதற்கிடையே இளம்பெண்கள் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்று பரவும் செய்தியையும் வதந்தி என மறுத்துள்ளார். அய்யப்ப பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகாளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story