மீடூ விவகாரம்; பொதுநல மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


மீடூ விவகாரம்; பொதுநல மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 22 Oct 2018 8:09 AM GMT (Updated: 22 Oct 2018 8:09 AM GMT)

மீடூ விவகாரத்தில் பெண்கள் கூறும் பாலியல் துன்புறுத்தல்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்வது பற்றிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது.

புதுடெல்லி,

நடிகை தனுஸ்ரீ தத்தா இந்தி திரைப்பட நடிகர் நானா படேகர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுப்பினார்.  இதனையடுத்து பாலிவுட்டில் மீடூ விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.  அதில், பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும்பொழுது அதன்மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதனுடன், குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் பெண்களுக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆனது பாதுகாப்பு மற்றும் உதவிகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்து உள்ளார்.  இந்த பொதுநல மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே. கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனு வழக்கம்போல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கூறினர்.

Next Story