அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் சரிவு


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் சரிவு
x
தினத்தந்தி 23 Oct 2018 4:50 AM GMT (Updated: 23 Oct 2018 4:50 AM GMT)

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் சரிவடைந்து ரூ.73.79 ஆக உள்ளது.

மும்பை,

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது 23 காசுகள் குறைந்து ரூ.73.79 ஆக உள்ளது.

இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க கரன்சியான டாலர் அதிக அளவில் தேவைப்பட்ட நிலையிலும், காலை வர்த்தகம் தொடங்கியதும் உள்ளூர் பங்கு சந்தை இழப்பினை சந்தித்த நிலையிலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது.

தொடக்கத்தில் ரூ.73.74 என்ற அளவில் இருந்து பின்னர் கூடுதலாக 23 காசுகள் சரிவடைந்து இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.79 ஆக உள்ளது.  நேற்று வர்த்தகம் முடிவடைந்தபொழுது, அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.56 ஆக இருந்தது.

Next Story