சட்டவிரோத முறையிலான சுரங்கங்களை நிறுத்த ராஜஸ்தான் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சட்டவிரோத முறையிலான சுரங்கங்களை நிறுத்த ராஜஸ்தான் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Oct 2018 8:43 AM GMT (Updated: 23 Oct 2018 8:43 AM GMT)

சட்டவிரோத முறையிலான சுரங்கங்களை நிறுத்த ராஜஸ்தான் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

ராஜஸ்தானில் ஆரவல்லி பகுதியில் பல்வேறு மலைகள் உள்ளன.  இந்த நிலையில் மத்திய அதிகாரமளித்தல் குழு அளித்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த பகுதியில் இருந்து 31 மலைகள் அல்லது மலை பகுதிகள் மறைவடைந்து விட்டன என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆரவல்லி மலை பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத சுரங்கங்கள் பற்றிய வழக்கு விசாரணை ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.  இதுபற்றிய விசாரணையில் நீதிபதிகள் மதன் லோகுர் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு தீர்ப்பு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு அளவு அதிகரிப்பதற்கு ராஜஸ்தானில் மலைகள் மறைவும் ஒரு காரணம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதில், 115.34 ஹெக்டேர் பரப்பிலான ஆரவல்லி மலை பகுதிகளில் சட்டவிரோத முறையிலான சுரங்கங்களை 48 மணிநேரத்தில் அரசு நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.  இந்த விவாகரத்தினை அரசு மிக லேசாக எடுத்து கொண்டுள்ளது.  இதனால் இந்த உத்தரவை வலுகட்டாயமுடன் பிறப்பிக்க வேண்டியிருந்தது என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளது.

Next Story