சபரிமலையில் இதேபோன்ற நிலை தொடர்ந்தால் உயிரிழப்பு நேரிட வாய்ப்பு ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை


சபரிமலையில் இதேபோன்ற நிலை தொடர்ந்தால் உயிரிழப்பு நேரிட வாய்ப்பு ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2018 10:19 AM GMT (Updated: 23 Oct 2018 10:19 AM GMT)

சபரிமலையில் இதேபோன்ற நிலை தொடர்ந்தால் உயிரிழப்பு நேரிட வாய்ப்பு உள்ளது என ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.


திருவனந்தபுரம்,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் திறக்கப்பட்ட போது பெண்கள் செல்வதற்கு முயற்சி செய்தார்கள்.  அப்போது பக்தர்கள் போராட்டம் காரணமாக அவர்கள் சன்னிதானம் செல்ல முடியாமல் திரும்பினர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு வழங்கினாலும் பெண்கள் செல்ல முடியவில்லை. பக்தர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இதுபோன்ற நிலை தொடர்ந்தால் உயிரிழப்பு நேரிட வாய்ப்பு உள்ளது என ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

கேரளா ஐகோர்ட்டில் சபரிமலை சிறப்பு கமிஷ்னர் என் மனோஜ் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “விழாக்காலமான அடுத்த மாதம் அதிகமான பக்தர்களின் கூட்டம் இருக்கும். பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்களால் இதுபோன்ற போராட்டம் நடந்தால் அங்கு நெருக்கடியான நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள், போலீசார் மற்றும் பிறர் காயமடைய மற்றும் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story