கீதை, ராமாயணா புத்தங்களை பள்ளிகள் வாங்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்றது ஜம்மு காஷ்மீர் அரசு


கீதை, ராமாயணா புத்தங்களை பள்ளிகள் வாங்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்றது ஜம்மு காஷ்மீர் அரசு
x
தினத்தந்தி 23 Oct 2018 12:37 PM GMT (Updated: 23 Oct 2018 12:37 PM GMT)

கீதை, ராமாயணா புத்தங்களை பள்ளிகள் வாங்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை ஜம்மு காஷ்மீர் அரசு வாபஸ் பெற்றது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் உருது மற்றும் காஷ்மீரி வெர்ஷன் பகவத் கீதை மற்றும் ராமாயணம் ஆகிய புத்தகங்களை வாங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது. மாநில கல்வித்துறையின் இந்த உத்தரவு சிவில் பாதுகாப்பு குழுக்கள், மற்றும் உள்ளூர் அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சனத்துக்குள்ளானது. 

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா மாநில கல்வித்துறையின் உத்தரவு ஒரு குறிப்பிட்ட மதத்தினுடைய புத்தகத்தை மட்டும் வாங்குமாறு இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில், கடும் சர்ச்சைக்குள்ளான, மேற்கூறிய கல்வித்துறையின் உத்தரவை வாபஸ் பெறுவதாக மாநில தலைமைச்செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 

Next Story