வெள்ளம் பாதித்த கேரளாவில் எம்.எல்.ஏக்களுக்கு சொகுசு அபார்ட்மெண்ட் கட்டுவதில் சர்ச்சை


வெள்ளம் பாதித்த கேரளாவில் எம்.எல்.ஏக்களுக்கு சொகுசு அபார்ட்மெண்ட் கட்டுவதில் சர்ச்சை
x
தினத்தந்தி 24 Oct 2018 8:17 AM GMT (Updated: 25 Oct 2018 9:51 AM GMT)

வெள்ளம் பாதித்த கேரளாவில் எம்.எல்.ஏக்களுக்கு சொகுசு அபார்ட்மெண்ட் கட்டுவது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் இந்த  நூற்றாண்டில் ஏற்பட்ட மோசமான பேரழிவின் பின்னர் மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டு வருவதால் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 80 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

 நகரின் மையத்தில் அமைந்துள்ள சட்டமன்ற வளாகத்தில் ஒரு பழைய கட்டிடத்தை இடித்து, அதில்  பல அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தை கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் கேரள சபாநாயகர் வி.எம்.சுதீரன் கூறியதாவது:-

சட்டமன்ற உறுப்பினர்கள்  மேம்படுத்த வசதிகளை பெற வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த நேரம் பல கோடி திட்டங்கள் செயல்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது என கூறினார்.

மாநிலத்தின் மிக மோசமான நெருக்கடி நேரத்தில், முழு முயற்சி மூலம் பெறப்பட்ட  நிதி மூலம்  நமது மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நான் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று நான் கூறமாட்டேன், ஆனால் இப்போது நடக்கக் கூடாது என கூறினார்.

முந்தைய உம்மன் சாண்டி அரசாங்கத்தினால்  இந்த அப்பார்ட்மெண்ட்  மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டது. பினராய் விஜயன் அரசாங்கம் இதை  முன்னோக்கி எடுத்து செல்கிறது.

Next Story