சிபிஐ பா.ஜனதா போலீஸ் ஏஜென்சியாக மாறிவிட்டது : மம்தா பானர்ஜி தாக்கு


சிபிஐ பா.ஜனதா போலீஸ் ஏஜென்சியாக மாறிவிட்டது : மம்தா பானர்ஜி தாக்கு
x
தினத்தந்தி 24 Oct 2018 9:18 AM GMT (Updated: 24 Oct 2018 9:18 AM GMT)

சிபிஐ பா.ஜனதா போலீஸ் ஏஜென்சியாக மாறிவிட்டது என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

சிபிஐயில் நிலவிய பனிப்போர் காரணமாக சிபிஐ இயக்குர் அலோக் வர்மா, இணை இயக்குநர் அஸ்தானாவை கட்டாய விடுப்பில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. புதிதாக சிபிஐ இயக்குநராக நாகேஸ்வரராவை நியமித்தது. மத்திய அரசின் இந்நகர்வை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சிபிஐ பா.ஜனதா போலீஸ் ஏஜென்சியாக மாறிவிட்டது என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். “சிபிஐ இப்போது பிபிஐயாக (BJP Bureau of Investigation)  மாறிவிட்டது, மிகவும் துரதிஷ்டவசமானது,” என மம்தா பானர்ஜி டுவிட்டரில் விமர்சித்துள்ளார். 

Next Story