தேசிய செய்திகள்

அதிர்ச்சி சம்பவம் : 100 வயது பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம் + "||" + West Bengal: 100-year-old lady allegedly raped by youth

அதிர்ச்சி சம்பவம் : 100 வயது பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம்

அதிர்ச்சி சம்பவம் : 100 வயது பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம்
100 வயது முதிய பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் ஒரு வாலிபரால் 100 வயதான ஒரு பெண்  கற்பழிக்கப்பட்டதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தின் நாடியா மாவட்டம் சக்தாவில்  பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் 20 வயது வாலிபரை கைது செய்து உள்ளனர். அவர் கலியாணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து  கூறப்படுவதாவது:- 

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் சக்தாவில் கங்கா பிரசாத்பூர் கிராமத்திற்கு சென்ற அவிஜித் பிஸ்வாஷ் என்ற வாலிபர் அங்கு ஒரு அறையில் தனியாக இருந்த 100 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.  அந்த முதிய பெண்ணின்   அழுகை சத்தம் கேட்டு உறவினர்கள்  வந்து உள்ளனர். வாலிபர் அவிஜித்  பாதிக்கப்பட்டவரின் படுக்கையின் கீழே மறைந்து இருந்து உள்ளார்.

உறவினர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து உள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கட்டிட மேஸ்திரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கட்டிட மேஸ்திரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
2. பீகார் காப்பகங்களில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்டு
பீகாரில் காப்பகங்களில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டது தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு சிபிஐக்கு மாற்றியது.
3. ஓசூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் லாரி டிரைவருக்கு வலைவீச்சு
ஓசூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. வெள்ளகோவில் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளி போக்சோ சட்டத்தில் கைது
வெள்ளகோவில் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன காவலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு நடைபெற்றது. பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.