காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி


காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி
x
தினத்தந்தி 29 Oct 2018 10:00 PM GMT (Updated: 29 Oct 2018 7:44 PM GMT)

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநில சர்வதேச கட்டுப்பாட்டு கோடு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 23-ந் தேதி பூஞ்ச் மற்றும் ஜாலியஸ் பகுதியில் இந்திய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். மேலும், பீரங்கி குண்டுகளையும் வீசினார்கள்.

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய வீரர்கள் நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள அவர்களின் ராணுவ தலைமையகம் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை உறுதிப்படுத்திய அந்த பகுதியில் உள்ள கிராமவாசிகள் கடும் புகை எழுந்ததாக தெரிவித்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கிராம மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தவில்லை எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள பாந்தா சவுக் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் வழக்கம்போல் ரோந்து சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் ராணுவ வீரர்களை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் நமது ராணுவ வீரர்கள் 5 பேர் காயம் அடைந்தனர்.

Next Story