தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் வாக்குகளை பெற கட்டிங், ஷேவிங் செய்து குளிப்பாட்டும் வேட்பாளர்களால் மக்கள் எரிச்சல் + "||" + Need A Meal, Bath Or Shave In Telangana Just Contact A Local Candidate

தெலுங்கானாவில் வாக்குகளை பெற கட்டிங், ஷேவிங் செய்து குளிப்பாட்டும் வேட்பாளர்களால் மக்கள் எரிச்சல்

தெலுங்கானாவில் வாக்குகளை பெற கட்டிங், ஷேவிங் செய்து குளிப்பாட்டும் வேட்பாளர்களால் மக்கள் எரிச்சல்
தெலுங்கானாவில் வாக்காளர்களை எப்படியாவது கவரவேண்டும் என்று வேட்பாளர்கள் செய்யும் செயல் மக்களை எரிச்சலடையை செய்துள்ளது.

ஐதராபாத்,


சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வாக்காளர்களை எப்படியாவது கவரவேண்டும் என்று வேட்பாளர்கள் செய்யும் செயல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. அவர்களின் பெரும்பாலான செயல்கள் மக்களை எரிச்சலடையை செய்துள்ளது. முடி வெட்ட வேண்டுமா? ஷேவிங் செய்ய வேண்டுமா? குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டுமா? சாப்பாடு வேண்டுமா? என அனைத்திற்கும் தயாராக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார். பிற மாநிலங்களில் இல்லாத அளவு அடிமட்டம் வரையில் சென்று பிரசாரத்தை தீவிரப்படுத்துகிறார்கள் வேட்பாளர்கள்.

சங்கரரெட்டி தொகுதியின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் வேட்பாளர் சிந்தியா பிரபாகர் மக்களுக்காக சமையல் செய்கிறார். வயதானவர்களை கட்டியணைத்து, பென்ஷன் பணம் தொடர்பான தகவல்களை விசாரிக்கிறார். வாக்குகளை பெற கட்டிங், ஷேவிங் செய்து குளிப்பாட்டும் அளவிற்கு நிலை அங்கு சென்றுள்ளது. சித்திபேட் தொகுதியின் வேட்பாளர் ஹரிஷ் ராவ் தரப்பில் அனுபவம் பெற்ற தொழிலாளர்கள் கட்டிங், ஷேவிங் இலவசமாக செய்து வருகிறார்கள். இதுபோன்று வாக்காளர் வீட்டில் சாவு நிகழ்ந்தால் பாடையை சுமப்பது செல்லும் காட்சிகளும் அங்கு நடைபெற்று வருகிறது. 

வாக்குகளை பெற எந்த நிலைக்கும் செல்வார்கள் என்பதை காட்டும் வகையில் அங்கு சம்பவம் தொடர்வது மக்களை எரிச்சல் அடைய செய்துள்ளனர். அவர்களும் தங்களுடைய கோபத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானாவில் லேசான நில அதிர்வு
தெலுங்கானாவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
2. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்: தலைவராக குமாரசாமி போட்டியின்றி தேர்வு
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவராக குமாரசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
3. தெலுங்கானாவில் 18 காங். எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி
தெலுங்கானாவில் 18 காங்.எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
4. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் திருப்பதியில் சாமி தரிசனம்
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
5. தேர்தலில் தோல்வி: 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டம்
தேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.