சத்தீஷ்கர்: நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டைக்கு நடுவே தாயாருக்கு வீடியோ செய்தி - தூர்தர்‌ஷன் ஊழியர் உருக்கம்


சத்தீஷ்கர்: நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டைக்கு நடுவே தாயாருக்கு வீடியோ செய்தி - தூர்தர்‌ஷன் ஊழியர் உருக்கம்
x
தினத்தந்தி 31 Oct 2018 5:31 PM GMT (Updated: 31 Oct 2018 5:31 PM GMT)

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டைக்கு நடுவே, தாயாருக்கு தூர்தர்‌ஷன் ஊழியர் அனுப்பிய உருக்கமான வீடியோ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நேற்று துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 2 போலீசாரும், அவர்களுடன் சென்ற தூர்தர்‌ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாகுவும் பலியானார்கள். தூர்தர்‌ஷன் நியூஸ் சேனலின் உதவியாளர் மூர்முகுத் சர்மா, பத்திரிகையாளர் தீரஜ் குமார் ஆகியோர் உயிர்தப்பினர்.

முன்னதாக, துப்பாக்கி சண்டைக்கு நடுவே, மூர்முகுத் சர்மா தனது தாயாருக்காக பேசி, வீடியோவில் பதிவு செய்தார். ஒரு கால்வாய்க்குள் படுத்தபடி அவர் பதிவு செய்த வீடியோவில், துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாயும் காட்சி தெரிகிறது.

அதில், ‘அம்மா, இந்த தாக்குதலில் நான் கொல்லப்படலாம். உயிர் பிழைத்தால் நன்றி சொல்வேன். மரணம் என்னை நெருங்கியபோதிலும் எனக்கு பயம் இல்லை’ என்று அவர் பேசி உள்ளார். அந்த வீடியோவை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் தூர்தர்‌ஷன் வெளியிட்டுள்ளது.

 

Next Story