ராகுல் காந்தியுடன் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு


ராகுல் காந்தியுடன் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு
x
தினத்தந்தி 1 Nov 2018 12:46 PM IST (Updated: 1 Nov 2018 12:46 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசுகிறார்.

புதுடெல்லி,

2019-ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும்  முயற்சியாக  ஆந்திர முதல்வரும் தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசுகிறார்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமதியை வீழ்த்த காங்கிரஸுடன் தெலுங்குதேசம் கரம் கோர்க்க உள்ளது. இதுதொடர்பாகவும் ராகுல் காந்தியுடன் இந்த சந்திப்பின் போது சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதவிர பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு அரசியல் கட்சித் தலைவர்களான, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோரையும் சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.


Next Story