தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு + "||" + 2 militants killed in encounter with security forces in JK

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையிலான சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

பட்காம் மாவட்டம் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி பாதுகாப்பு படையினர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்தனர். பாதுகாப்பு படையினர் சரண் அடைய எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் அவர்களுடைய தாக்குதல் தொடர்ந்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடியை கொடுத்தனர். இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அடையாளம் இன்னும் அறியப்படவில்லை என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே சண்டை நடைபெற்ற இடத்தில் கும்பல் ஒன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. மீடியா வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
2. ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. தற்கொலை படை தாக்குதல் நடத்தி 44 பேரை கொன்ற தீவிரவாதி இவன் தான்
தற்கொலை படை தாக்குதல் நடத்தி 44 பேரை கொன்ற தீவிரவாதி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
4. ஜம்முவில் செல்போன் இணைய தள சேவை தற்காலிகமாக நிறுத்தம்
ஜம்முவில் செல்போன் இணைய தள சேவை தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
5. ஜம்மு காஷ்மீர்: ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.