“பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்,” சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பிற்கு பின்னர் ராகுல்காந்தி பேச்சு


“பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்,” சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பிற்கு பின்னர் ராகுல்காந்தி பேச்சு
x

“பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்,” என சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பை அடுத்து ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சந்திரபாபு நாயுடு முயற்சி செய்து வருகிறார். இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மொத்தமாக செய்தியாளர்களிடம் பேசினர். 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ஜனநாயக நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்றும். வேலைவாய்ப்பின்மை, ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் போன்ற முக்கிய விவகாரங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். ஊழல் உள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. விசாரணையை மேற்கொள்ளும் நிறுவனங்களும் தாக்குதலின் கீழ் உள்ளது. நடக்கும் ஒவ்வொரு விவகாரம் தொடர்பாகவும் முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். எங்கு பணம் சென்றது, எங்கு ஊழல் நடைபெற்றது என்பது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். இதனையே நான் மிகவும் தீவிரமாக வலியுறுத்தி வருகிறேன். தேச மக்களும் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும், என்றார்.

Next Story