கிணற்றை தூர்வாரும் போது விஷவாயு தாக்கி தீயணைப்பு வீரர் உட்பட 5 பேர் பலி
தானே அருகே கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி, காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் உட்பட 5 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தானே,
மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள கல்யாண் என்ற கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்று இருந்துள்ளது. அந்த கிணற்றின் உரிமையாளர் அதனை தூர்வார எண்ணி, தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினார். பணிக்கு வந்த தொழிலாளி ஒருவர் முதலில் கிணற்றில் இறங்கிய போது விஷ வாயு தாக்கியது.
உடனே அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அவரை காப்பாற்ற அங்கு இருந்த தொழிலாளர்கள் 2 பேர் கிணற்றில் இறங்கிய போது அவர்களையும் விஷவாயு தாக்கியது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு கிணற்றுக்குள் விழுந்தனர். இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்ற வந்த தீயணைப்பு வீரர்கள் 2 பேர் கிணற்றில் இறங்கிய போது அவர்களையும் விஷவாயு தாக்கி அவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். கிணற்றில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை கயிறு மூலம் கிராம மக்கள் மற்றும் போலீசார் மீட்டனர்.
தீயணைப்புத்துறை வீரர்கள் இரண்டு பேர் உட்பட 5 பேர் விஷவாயு தாக்குதலுக்கு ஆளாகி, அனைவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story