தேசிய செய்திகள்

வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு + "||" + Karthi Chidambaram petitioned to the Supreme Court seeking permission to go abroad

வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு

வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

புதுடெல்லி,

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை நிறுவனங்கள் பதிவு செய்துள்ள இந்த வழக்குகளில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் யு.யு.லலித், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது அவ்வளவு முக்கியமில்லை எனக்கூறிய நீதிபதிகள், எனவே ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பின்னரே இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்
கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கானது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
2. வெற்றி பெற்றுள்ள தொகுதியில் கவனம் செலுத்துங்கள்: கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
வைப்புத்தொகையாக செலுத்திய ரூ.10 கோடியை திரும்ப கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
3. என் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பா.ஜனதா அரசு என்னை மிரட்ட முடியாது கார்த்தி சிதம்பரம் பேட்டி
என் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பா.ஜனதா அரசு எப்போதும் என்னை மிரட்ட முடியாது என்று புதுக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
4. ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் - கார்த்தி சிதம்பரம்
தமிழகத்தில் பா.ஜ.க. கொள்கைகளுக்கு வரவேற்பு இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
5. வெளிநாடு செல்ல அனுமதி வழங்க கோரிக்கை : கார்த்தி சிதம்பரத்தின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.