தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை + "||" + One terrorist gunned down in encounter in Jammu and Kashmir

காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.


ஸ்ரீநகர், 

குப்வாராவின் சாகிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியை போலீசார் சுற்றிவளைத்தனர். அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். உடனே போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டான். அதனை தொடர்ந்து மற்ற பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் மோதல் - பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 2 பேர் பலி
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 2 பேர் இறந்தனர்.
2. காஷ்மீர்: ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
3. காஷ்மீரில் விட்டு விட்டு பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு
காஷ்மீரில் விட்டு விட்டு பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
4. காஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தலில் போட்டி - “எந்த கட்சியிலும் சேர மாட்டேன்” என்றும் அறிவிப்பு
காஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தலில் போட்டியிட உள்ளார், மேலும் அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
5. காஷ்மீர்: கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.