நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் திட்டங்களை தொடங்கி வைத்தார் - பிரதமர் மோடி
நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் சிறு, குறு , நடுத்தர தொழில்களுக்கான கடன் திட்டங்களை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை மந்திரி கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வசதி, சந்தை வசதி உள்ளிட்ட ஆதரவு நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 நாட்கள் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story