தொழில் தொடங்க உகந்த சூழல் இந்தியா 77-வது இடம்: பிரதமர் மோடிக்கு உலக வங்கி தலைவர் வாழ்த்து
தொழில் தொடங்க உகந்த சூழல் இந்தியா 77-வது இடத்திற்கு முன்னேறியதற்கு, உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கட்டுமான அனுமதி நடைமுறை, சொத்து பதிவு, கடன், மின்சாரம், சிறுமுதலீட்டாளர் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்சங்களைக் கொண்டு, தொழில் தொடங்க உகந்த நாடுகளை உலக வங்கி பட்டியலிட்டு வருகிறது. இந்த பட்டியலில் 190 நாடுகள் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு 30 இடங்கள் முன்னேற்றம் கண்டு 100-வது இடத்திற்கு இந்திய முன்னேறியது.
இந்நிலையில் 2018-ம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை உலக வங்கி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 100-வது இடத்தில் இருந்து 23 இடங்கள் முன்னேறியுள்ளது. இதனையடுத்து இந்த பட்டியலில் இந்தியா 77-வது இடம் பெற்றுள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளுக்கான பட்டியலில் உள்ள தெற்காசிய நாடுகளிலேயே இந்தியா தற்போது முன்னணியில் உள்ளது.
இந்தநிலையில், தொழில் தொடங்க உகந்த சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 77-வது இடத்திற்கு முன்னேறியதற்கு, உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story