திருப்பதியை தொடர்ந்து திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: 10-ந்தேதிக்கு பிறகு அமல்


திருப்பதியை தொடர்ந்து திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: 10-ந்தேதிக்கு பிறகு அமல்
x
தினத்தந்தி 3 Nov 2018 6:23 PM GMT (Updated: 3 Nov 2018 6:23 PM GMT)

திருப்பதியை தொடர்ந்து திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது வரும் 10-ந்தேதிக்கு பிறகு அமல்படுத்தப்பட உள்ளது.

திருப்பதி,

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்ப்பதற்காக புகழ்பெற்ற வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருப்பதியில் கடந்த மாதம் 2–ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு நகர் முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக திருப்பதி திருமலையிலும் வருகிற 10–ந்தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக திருமலையில் கடந்த 1–ந்தேதி முதலே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்குள்ள வியாபாரிகள் கேட்டுக்கொண்டதால் இந்த தடை நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி கே.எஸ்.சீனிவாச ராஜு தெரிவித்தார். நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்காலிடம் இருந்து இந்த தடைக்கான ஒப்புதலை பெற்று விட்டபின், இந்த உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்படும் எனவும் சீனிவாச ராஜு கூறினார்.


Next Story