மிசோரம் சபாநாயகர் திடீர் ராஜினாமா, பாஜகவில் இணைந்தார்


மிசோரம் சபாநாயகர் திடீர் ராஜினாமா, பாஜகவில் இணைந்தார்
x
தினத்தந்தி 5 Nov 2018 8:03 AM GMT (Updated: 5 Nov 2018 8:15 AM GMT)

மிசோரம் சபாநாயகர் ஹிப்பி திடீரென ராஜினாமா செய்து இருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வால்,

மிசோரம் மாநில சட்டப் பேரவைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மொத்தம் 40 பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2013-ல் நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இந்தநிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப்பேரவை சபாநாயகருமான ஹிப்பி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.  மேலும், உடனடியாக பாரதீய ஜனதா கட்சியிலும் அவர் இணைந்துள்ளார்.

2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாலக் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்வான ஹிப்பி, அக்கட்சியின் முக்கிய தலைவர் ஆவார். வடகிழக்கு மாநிலங்களில் தற்போது மிசோரம் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. 

Next Story