தாஜ் மஹால் வளாக மசூதியில் வெள்ளிக்கிழமை தவிர, மற்ற நாட்களில் தொழுகை செய்வதை நிறுத்த வேண்டுகோள்


தாஜ் மஹால் வளாக  மசூதியில் வெள்ளிக்கிழமை தவிர, மற்ற நாட்களில்  தொழுகை செய்வதை நிறுத்த வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Nov 2018 9:32 AM GMT (Updated: 5 Nov 2018 9:43 AM GMT)

தாஜ் மஹால் வளாகத்திற்குள்ளே உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தவிர, மற்ற நாட்களில் தொழுகை செய்வதை நிறுத்துவதற்கு இந்திய தொல்பொருளியல் ஆய்வு அமைப்பு (ASI) முஸ்லிம்களைக் கேட்டு கொண்டுள்ளது


புதுடெல்லி

வெள்ளிக்கிழமை தவிர, மற்ற நாட்களில்  ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால் வளாகத்திற்குள்ளே உள்ள  மசூதியில்  தொழுகை செய்வதை நிறுத்துவதற்கு இந்திய தொல்பொருளியல் ஆய்வு  அமைப்பு (ASI) முஸ்லிம்களைக் கேட்டு கொண்டுள்ளது.இந்தஉத்தரவு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினாலும் இந்திய ,தொல்பொருளியல் ஆய்வு   அதிகாரிகள் ஜூலை மாதம் வழங்கப்பட்ட சுப்ரீம் ஓர்ட்  உத்தரவை  செயல்படுத்துவதாக கூறி உள்ளனர்.

வெள்ளிக்கிழமை தோறும் ஆக்ராவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் மட்டும் கட்டணமின்றி தாஜ்மகாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று மதியம் அவர்கள் தொழுகை நடத்துவார்கள்.

மற்ற நாட்களில் அதாவது சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 6 நாட்களும் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும் மற்ற ஊர் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் தாஜ்மகாலில் தினமும் மதியம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர்


இந்த நிலையில் வெளி முஸ்லிம்களும் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்துவது தெரியவந்தது. இது தாஜ்மகாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் இது குறித்து ஆக்ரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு, வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் சென்று தொழுகை செய்ய தடை விதித்தது.

இந்த சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், “தாஜ்மகாலில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தாஜ்மகாலுக்குள் வெள்ளிக்கிழமை நடக்கும் தொழுகையில் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சமீபத்தில் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையை நேற்று முதல் தொல்லியல் துறையினர் தொடங்கி உள்ளனர்.

நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்த முயன்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வழக்கமாக தாஜ்மகாலுக்குள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டி விட்டனர். தாஜ்மகால் வளாகத்துக்குள் எந்த இடத்திலும் தொழுகை நடத்தக் கூடாது என்று அனுமதி மறுத்தனர்.

வெளி ஊர்களில் இருந்து தாஜ்மகாலுக்கு வந்திருந்த முஸ்லிம் சுற்றுலா பயணிகளுக்கு இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. தொல்லியல் துறை நடவடிக்கைக்கு இமாம் சையது சாதிக் அலி, தாஜ்மகால் தொழுகை கமிட்டி தலைவர் சையது இப்ராகிம் உசைன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் தொல்லியல் துறையினர் அதை ஏற்க வில்லை. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதாக கூறியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை  இந்திய தொல்பொருளியல் ஆய்வு  அமைப்பு  தொழுகைக்கு முன் ஒது செய்யும் இடத்தை பூட்டி வைத்தது.  வைத்தது. 

இமாம் சையத் சாதிக் அலி அவர்களின் குடும்பத்தினர் தொழுகையை  வழிநடத்துகின்றனர் என்று ஒரு டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. பல தசாப்தங்களாக தாஜ் மஹால் இந்திய தொல்பொருளியல் ஆய்வு மசூதி வரிசையில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளது.இமாம் மற்றும் மசூதி ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே காணப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தாஜ் மஹால் மஸ்ஜித் நிர்வாகக் குழுவின் தலைவர் சையத் இப்ராஹிம் ஹுசைன் ஜெய்தி, தாஜ் மஹால் வளாகத்தில் தொழுகையை நிறுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறினார். அவர் நடைமுறையில் தொழுகை  பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என கூறினார்.

Next Story