கர்நாடகா இடைத் தேர்தல்: காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அபாரம், பின்னடைவை சந்தித்த பாஜக !


கர்நாடகா இடைத் தேர்தல்: காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அபாரம், பின்னடைவை சந்தித்த பாஜக !
x
தினத்தந்தி 6 Nov 2018 9:11 AM GMT (Updated: 6 Nov 2018 9:11 AM GMT)

கர்நாடகா இடைத் தேர்தல்: காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி 4 இடங்களில் வென்றுள்ளது. ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கும் கடந்த 3-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

 பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகள் மற்றும் ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை  தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில், காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஷிமோகா மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.  பாரதீய ஜனதா கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் பெல்லாரி தொகுதியிலும் 2,43,161 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஜமகண்டி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.  மதசார்பற்ற ஜனதாதள கட்சி ராம்நகர் மற்றும் மாண்டியா ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணிக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. இடைத்தேர்தல் வெற்றி, கர்நாடக கூட்டணி ஆட்சிக்கோ அல்லது மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சிக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற போதிலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தேர்தல் இருக்கலாம் என அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது. 


Next Story