சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளது: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்


சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளது: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
x
தினத்தந்தி 6 Nov 2018 10:58 AM GMT (Updated: 6 Nov 2018 10:58 AM GMT)

தீபாவளி நாளில் சென்னையில் காற்று மாசு குறைந்து உள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், தமிழகத்தில், காலையில் 6 முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில், பட்டாசு வெடிக்க விதிக்க கட்டுப்பாட்டால், சென்னையில் தீபாவளி தினத்தன்று காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில், காற்று மாசு 65 குறியீடாக பதிவாகியிருப்பதாகவும், டெல்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடு என  மிகவும் அபாய அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  

சென்னையில் சாதாரண அளவில் காற்று மாசு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் 353 என்ற அளவில் காற்று மாசு உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காற்று மாசு  குறியீடு 87 ஆக உள்ளது. வட மாநிலங்களை விட சென்னையில் மிகவும் குறைந்த அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது. 


Next Story