தேசிய செய்திகள்

அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம் : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு + "||" + Faizabad District Will Be Known As Ayodhya, Says Yogi Adityanath In Diwali Speech

அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம் : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம் : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம் கட்டப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
அயோத்யா, 

உத்தர பிரதேசத்தில் உள்ள பைசாபாத், அயோத்யா என அறியப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில், கலந்து கொண்ட உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பேசும் போது, ”அயோத்தி நமது பெருமை மற்றும் கவுரவத்தின் அடையாளம்” என்றார். 

மேலும், அயோத்தியில் தசரத ராஜா பெயரில் மருத்துவக்கல்லூரி ஒன்றும், ராமர் பெயரில் விமான நிலையமும் கட்டப்படும் என்றார். அலகாபாத் நகருக்கு பிரக்யாராஜ் என பெயர் மாற்றி நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமாக உத்தர பிரதேச அரசு அறிவித்த நிலையில், இந்த மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் முறையாக உ.பி செல்லும் பிரியங்கா காந்தி
கட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் முறையாக பிரியங்கா காந்தி உத்தர பிரதேசம் செல்கிறார்.
2. யோகி ஆதித்யநாத் விவகாரம்: மராட்டியம், பீகாரில் எனக்கு என்ன நடந்தது? மம்தா கேள்வி
யோகி ஆதித்யநாத் விவகாரத்தில் பதிலளித்துள்ள மம்தா, மராட்டியம், பீகாரில் எனக்கு என்ன நடந்தது? என மம்தா பானர்ஜி கேள்வியை எழுப்பியுள்ளார்.
3. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது - யோகி ஆதித்யநாத்
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
4. புகைக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்: கும்பமேளாவில் சாதுக்களுக்கு ராம்தேவ் அறிவுரை
புகைக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என சாதுக்களை ராம்தேவ் கேட்டுக்கொண்டார்.
5. 16 மாத யோகி ஆதித்யநாத் அரசில் 3000 என்கவுண்டர்கள், 78 பேர் கொலை
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சியமைந்த 16 மாதங்களில் 3000 என்கவுண்டர்கள் நடந்துள்ளது. அதில் 70 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.