அகமதாபாத் நகரின் பெயரை கர்னாவதி என மாற்றத்தயார்: குஜராத் அரசு


அகமதாபாத் நகரின் பெயரை கர்னாவதி என மாற்றத்தயார்: குஜராத் அரசு
x
தினத்தந்தி 7 Nov 2018 7:49 AM GMT (Updated: 7 Nov 2018 7:49 AM GMT)

சட்டத் தடைகள் இல்லாவிட்டால் அகமதாபாத் நகரின் பெயரை கர்னாவதி என மாற்றத் தயாராக இருப்பதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

அகமதாபாத், 

பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்யா என மாற்றப்படும் என்று உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்த சில மணி நேரங்களில், அகமதாபாத் நகரின் பெயரை கர்னாவதி என மாற்ற குஜராத் அரசு ஆர்வமாக இருப்பதாக குஜராத் மாநில துணை முதல் மந்திரி நிதின் படேல் தெரிவித்தார். 

காந்தி நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதின் படேல் இந்த தகவலை தெரிவித்தார். நிதின் படேல் இது பற்றி கூறும் போது, “ போதுமான ஆதரவு மற்றும் சட்ட தடைகளை கடக்குமேயேனால், அகமதாபாத் நகரின் பெயரை மாற்ற குஜராத் அரசு தயராக உள்ளது. அகமதாபாத் நகரின் பெயரை கர்னாவதி என மாற்ற வேண்டும் என்று மக்கள் எண்ணுகின்றனர்” என்றார்.

ஆனால், பாரதீய ஜனதா அரசின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ், அகமதாபாத் பெயர் மாற்றப்படும் என்று பாஜக கூறுவது இன்னொரு ”தேர்தல் ஏமாற்று வித்தை”  என்று தெரிவித்துள்ளது. 

Next Story