தேசிய செய்திகள்

வங்கி மோசடி வழக்கு:நிரவ் மோடியின் ரூ.56¾ கோடி சொத்துகள் முடக்கம்அமலாக்கத்துறை நடவடிக்கை + "||" + Nirav Modi Rs.56 crore worth of assets are freezing

வங்கி மோசடி வழக்கு:நிரவ் மோடியின் ரூ.56¾ கோடி சொத்துகள் முடக்கம்அமலாக்கத்துறை நடவடிக்கை

வங்கி மோசடி வழக்கு:நிரவ் மோடியின் ரூ.56¾ கோடி சொத்துகள் முடக்கம்அமலாக்கத்துறை நடவடிக்கை
நிரவ் மோடி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமாக இந்தியா மற்றும் பிறநாடுகளில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வருகிறது.
புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி, அதனை திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் நிரவ் மோடி மற்றும் அவருடைய உறவுக்காரர் மெகுல் சோக்சி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர்.

இது தொடர்பாக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிரவ் மோடி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமாக இந்தியா மற்றும் பிறநாடுகளில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. அந்தவகையில் துபாயில் நிரவ் மோடி மற்றும் அவருடைய நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள 11 சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கி இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.56 கோடியே 80 லட்சம் என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில், வங்கி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சியின் நண்பரான தீபக் குல்கர்ணி என்பவரை கொல்கத்தா விமான நிலையத்தில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ஹாங்காங்கில் உள்ள மெகுல் சோக்சியின் நிறுவனத்தின் இயக்குனராக தீபக் குல்கர்ணி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மோசடி எதுவும் இல்லை, ”நடைபெற்றது சிவில் பரிவர்த்தனையே”: நீதிமன்றத்தில் நிரவ் மோடி பதில்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தான் மோசடி எதுவும் செய்யவில்லை என்று நிரவ் மோடி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2. நிரவ் மோடி பிரிட்டனில் உள்ளார்: மத்திய அரசு விளக்கம்
வங்கியில் மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. கடற்கரை பகுதியில் இருந்த நிரவ் மோடி பங்களா இடிப்பு
கடற்கரை பகுதியில் இருந்த நிரவ் மோடி பங்களா இடித்து தள்ளப்பட்டதாக மும்பை ஐகோர்ட்டில் மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.
4. நிரவ் மோடியை பார்த்ததே கிடையாது ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி பதில்
நிரவ் மோடியை பார்த்ததே கிடையாது என ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பதிலளித்துள்ளார்.
5. மல்லையா, நிரவ் மோடியுடன் நட்பு; எங்களுக்கு எதிராக ஐடி ரெய்டா? மத்திய அரசு மீது அரவிந்த் கெஜ்ரிவால் பாய்ச்சல்
டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெல்லாட்டிற்கு சொந்தமான 15 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...