தேசிய செய்திகள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில்பெண்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய வழக்குகேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது + "||" + Sabarimala Ayyappan temple A new case The Kerala High Court dismissed

சபரிமலை அய்யப்பன் கோவிலில்பெண்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய வழக்குகேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது

சபரிமலை அய்யப்பன் கோவிலில்பெண்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய வழக்குகேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்கை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
கொச்சி,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், எம்.கே.நாராயணன் போத்தி என்பவர், பெண்கள் 21 நாட்கள் மட்டும் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல அனுமதிக்குமாறு கோவில் தலைமை தந்திரிக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, இது தொடர்பாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்றும், தேவைப்பட்டால் மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதேபோல், சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், அந்த மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்படும் வரை அங்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று கூறி அந்த மனுவையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை வழக்கில் தேவசம் போர்டு ‘பல்டி’ - தீர்ப்பை ஒத்திவைத்தது, சுப்ரீம் கோர்ட்டு
சபரிமலை வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்தது. அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் வி‌ஷயத்தில் தேவசம் போர்டு ‘பல்டி’ அடித்தது. சுப்ரீம் கோர்ட்டு, தீர்ப்பை ஒத்திவைத்தது.
2. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு, மண்டல பூஜை முடிந்ததை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது
சபரிமலையில் அய்யப்பன் கோவில் மகரவிளக்கு, மண்டல பூஜை முடிந்ததை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது.
3. கேரளாவில் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
கேரளாவில் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது.
4. இளம்பெண்கள் சபரிமலையில் வழிபாடு: பெண்ணியவாதி திருப்தி தேசாய் பாராட்டு
சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் வழிபட்டது சமத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
5. சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை
மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது.