தேசிய செய்திகள்

ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு + "||" + Flights Delayed In Mumbai After Strike By Air India Contract Ground Staff

ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு

ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு
ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பை,

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஒரு பிரிவினர் நேற்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை தரும் விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. விமான போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் விமான பயணிகள் சிலர் தங்கள் அசவுகர்யத்தை வெளியிட்டனர். 

ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறும் போது, “ நிலமையை மதிப்பிட்டு வருவதாகவும், விமான போக்குவரத்து இடையூறை சரி செய்யும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...