தேசிய செய்திகள்

பணத்தை தடை செய்யும் நோக்கத்தில் பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்படவில்லை: அருண் ஜெட்லி விளக்கம் + "||" + On Demonetisation Anniversary, Arun Jaitley Says Cash Ban Wasn't Aim

பணத்தை தடை செய்யும் நோக்கத்தில் பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்படவில்லை: அருண் ஜெட்லி விளக்கம்

பணத்தை தடை செய்யும் நோக்கத்தில் பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்படவில்லை: அருண் ஜெட்லி விளக்கம்
பண மதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 2-ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எதனால்? என விளக்கம் அளித்து அருண் ஜெட்லி தனது  பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது : “ பண மதிப்பிழப்பின் நோக்கம் பணத்தை கைப்பற்றுவது  இல்லை. முறையான பொருளாதாரத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்திலேயே பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒட்டு மொத்த பணமும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக, தவறான தகவல்களை கொண்ட விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது. 

பொருளாதார முறைப்படுத்துதலில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமான நடவடிக்கை பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகும். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை அரசு முதலில் குறி வைத்தது.  இதை செயல்படுத்த தவறியவர்கள் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள். வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விவரங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்தது. இதன் விளைவாக விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிந்தது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் பணத்தை செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வங்கிகளில் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டதன் மூலம், வங்கிகளின் கடன் வழங்கும் வலிமை மேம்பட்டது. அதிக அளவும் பணம் பெறப்பட்டதால், மியூட்சூவல் பண்ட் உள்ளிட்ட மேலும் சில  முதலீட்டுக்கு பணம் திருப்பி விடப்பட்டது. முறையான பொருளாதரத்தின் ஒரு பிரிவாக இவை உருவெடுத்தது. 

2018-19 நிதியாண்டில் தனிநபர் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 20.2 சதவீதம் அதிகரித்தது. கார்பரேட் வரி வருவாயும் 19.5 சதவீதம் அதிகரித்தது. நேரடி வரி வசூல்  6.6 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என முறையே அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இந்தியாவால் உருவாக்கப்பட்ட யுபிஐ, ருபே ஆகியவற்றால், விசா, மாஸ்டர் கார்டு போன்றவை இந்தியாவில் மார்கெட் பங்குகளை இழக்கத்தொடங்கியது” இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.