தேசிய செய்திகள்

3 வயது குழந்தையின் வாயில் பட்டாசை வைத்து வெடித்த வாலிபர் : ஆபத்தான நிலையில் சிறுமி + "||" + Meerut man sets off Diwali cracker in 3-yr-old’s mouth, victim critical

3 வயது குழந்தையின் வாயில் பட்டாசை வைத்து வெடித்த வாலிபர் : ஆபத்தான நிலையில் சிறுமி

3 வயது குழந்தையின் வாயில் பட்டாசை வைத்து  வெடித்த வாலிபர் : ஆபத்தான நிலையில் சிறுமி
3 வயது குழந்தையின் வாயில் பட்டாசை வைத்து வாலிபர் வெடித்ததால் ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
லக்னோ,

உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி அன்று வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார்.

அவரது வாய் சிதைந்த நிலையில் அலறித் துடித்தாள். அவளது வாயில் ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசு வைத்து வெடித்துள்ளார்.

உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

இதுகுறித்து குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்கு
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்கு
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
3. கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 46 பேர் மீது வழக்கு
தஞ்சை மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 46 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. நாகை மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 25 பேர் மீது வழக்கு
நாகை மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
5. இரவு பட்டாசு வெடிக்கும் நேரம் துவங்கியது: வண்ணக்கோலம் பூண்டது வானம் !
பட்டாசு வெடிப்பதற்கான 2-ஆம் கட்ட நேரம் துவங்கியதும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பட்டாசுகளை வெடித்தனர்.