தேசிய செய்திகள்

திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு உறுப்பினரை நீக்ககோரிய மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது + "||" + High Court further dismissed a petition filed by Prayar Gopalakrishnan

திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு உறுப்பினரை நீக்ககோரிய மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது

திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு உறுப்பினரை நீக்ககோரிய மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது
திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு உறுப்பினர் சங்கர்தாஸை நீக்கம் செய்யக்கோரிய மனுவை கேரளா ஐகோர்ட்டு நிராகரித்தது.

கொச்சி,

 
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து போராட்டம் தொடர்கிறது. 5-ம் தேதி சிறப்பு பூஜைக்காக கோவில் திறக்கப்பட்டது, அப்போது இருமுடிக்கட்டு இல்லாமல் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு உறுப்பினர் சங்கர்தாஸ் 18-ம் படியில் ஏறியது சர்ச்சையாகியது. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு உறுப்பினராக பதவியேற்ற போது இந்துமத வழிபாட்டு முறைகளை பின்பற்றுவதாக மேற்கொண்ட உறுதியளிப்பை சங்கர்தாஸ் மீறிவிட்டார் என கூறி  சங்கர்தாசுக்கு எதிராக முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இருமுடிக்கட்டு இல்லாமல் 18 படிகளில் ஏறக்கூடாது என்பது சங்கர்தாசுக்கு தெரியும், இது கோவிலின் பாரம்பரியமான கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை மீறுவதாகும். கேரள ஐகோர்ட்டில் உத்தரவை நேரடியாகவே மீறியுள்ளார், தவறாக நடந்துக்கொண்ட அவரை நீக்கம் செய்யலாம் என கோபாலகிருஷ்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே இருமுடியுடன் தான் கோவிலுக்கு சென்றேன். அங்கிருந்த சூழ்நிலை காரணமாக மற்றொருவருடன் இருமுடியை கொடுத்து வைத்திருந்தேன் என்று சங்கர்தாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மனுவை கேரளா ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது.