‘மோடி அரசு ரிசர்வ் வங்கியை கைப்பற்ற முயற்சிக்கிறது’ - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


‘மோடி அரசு ரிசர்வ் வங்கியை கைப்பற்ற முயற்சிக்கிறது’ - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Nov 2018 6:16 PM GMT (Updated: 8 Nov 2018 6:16 PM GMT)

ரிசர்வ் வங்கியை கைப்பற்ற மோடி அரசு முயற்சி செய்வதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,


நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், இந்த நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.

கொல்கத்தாவில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், மேற்கண்டவாறு கூறிய அவர், ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி கேட்டு இருக்கிறது என்று தெரிவித்ததோடு, அந்த வங்கியின் போர்டு வருகிற 19-ந் தேதி கூட இருக்கிறது என்றும், அதில் குறிப்பிட்ட சிலரை மத்திய அரசு நியமித்து இருப்பதாகவும் குறை கூறினார்.

மத்திய அரசின் கோரிக்கையை ரிசர்வ் வங்கி நிராகரித்தாலும் அல்லது ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தாலும் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் அப்போது ப.சிதம்பரம் தெரிவித்தார்.


Next Story