தேசிய செய்திகள்

15 நாட்கள் ‘பரோல்’ முடிவடைந்தது - இளவரசி, பெங்களூரு சிறைக்கு திரும்பினார் + "||" + 15 days 'parole' ended - Ilavarasi returned to Bangalore jail

15 நாட்கள் ‘பரோல்’ முடிவடைந்தது - இளவரசி, பெங்களூரு சிறைக்கு திரும்பினார்

15 நாட்கள் ‘பரோல்’ முடிவடைந்தது - இளவரசி, பெங்களூரு சிறைக்கு திரும்பினார்
15 நாட்கள் பரோல் முடிவடைந்ததை அடுத்து, இளவரசி பெங்களூரு சிறைக்கு திரும்பினார்.
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 20 மாதங்கள் ஆகின்றன.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்க்க 15 நாட்கள் பரோல் வழங்குமாறு இளவரசி முதல் முறையாக சிறை நிர்வாகத்திடம் மனு வழங்கினார்.

அதை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட சிறை நிர்வாகம், இளவரசிக்கு நிபந்தனையுடன் 15 நாட்கள் பரோல் வழங்கியது. இதையடுத்து இளவரசி கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். அவர் சென்னையில் தங்கியிருந்தார்.

15 நாட்கள் பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து இளவரசி நேற்று பெங்களூரு சிறைக்கு திரும்பினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற இளவரசிக்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டது
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற இளவரசிக்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.