தேசிய செய்திகள்

பா.ஜனதா தலைவருடன் ஆலோசித்தாரா? - சபரிமலை தந்திரியிடம் தேவஸ்தானம் விளக்கம் கேட்கிறது + "||" + Did he consult with BJP leader? - Devasthanam explains to Sabarimala Thandiri

பா.ஜனதா தலைவருடன் ஆலோசித்தாரா? - சபரிமலை தந்திரியிடம் தேவஸ்தானம் விளக்கம் கேட்கிறது

பா.ஜனதா தலைவருடன் ஆலோசித்தாரா? - சபரிமலை தந்திரியிடம் தேவஸ்தானம் விளக்கம் கேட்கிறது
பா.ஜனதா தலைவருடன் ஆலோசித்தாரா என சபரிமலை தந்திரியிடம் தேவஸ்தானம் விளக்கம் கேட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கடந்த மாதம் 19-ந் தேதி, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் வந்தபோது, அவர்கள் சன்னிதானத்துக்குள் நுழைந்தால், கோவில் கருவறையை மூடி விடுவேன் என்று தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு எச்சரிக்கை விடுத்தார். அவர் அப்படி சொல்வதற்கு முன்பு, தன்னுடன் ஆலோசனை நடத்தியதாக மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்தை கண்டரரு ராஜீவரு மறுத்தார்.


இந்நிலையில், பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையின் தகவல் தொடர்பாக விளக்கம் கேட்டு தலைமை தந்திரிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு ஆணையர் வாசு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து தேவஸ்தானம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், “என்ன நடந்தது என்பது பற்றி தெளிவு பெறுவதற்காகவே இதை செய்துள்ளோம். தந்திரி மீது நடவடிக்கை எடுப்பதற்காக அல்ல. அவர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது வார்த்தைகளை நம்புகிறோம், மதிக்கிறோம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பா.ஜனதா தலைவர் கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டாரா? விசாரணை நடத்த தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
கார் விபத்தில் உயிரிழந்த மத்திய மந்திரி கோபிநாத் முண்டே கொல்லப்பட்டதாக இணைய நிபுணர் சையது சுஜா கூறியிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
2. பா.ஜனதா தலைவரின் 13 நிறுவனங்களில் வருமான வரி சோதனை - ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்
பா.ஜனதா தலைவரின் 13 நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.