தேசிய செய்திகள்

மகராஷ்டிரா: சரக்கு ரயில் பெட்டியில் தீ விபத்து, மும்பை டிவிஷன் ரயில் சேவை பாதிப்பு + "||" + Maharashtra: Fire breaks out in goods train wagon, services in Mumbai division disrupted

மகராஷ்டிரா: சரக்கு ரயில் பெட்டியில் தீ விபத்து, மும்பை டிவிஷன் ரயில் சேவை பாதிப்பு

மகராஷ்டிரா: சரக்கு ரயில் பெட்டியில் தீ விபத்து, மும்பை டிவிஷன் ரயில்  சேவை பாதிப்பு
சரக்கு ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மும்பையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலம், பல்கர் மாவட்டத்தில் உள்ள தாஹானு அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட இந்த விபத்தால், மும்பை டிவிஷன் பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட தடம் வழியாக இன்னும் ரயில் சேவை இயக்கப்படவில்லை என்று தகவல்கள் வருகின்றன. 

இரவு 10.35 மணியளவில், ஏற்பட்ட தீ விபத்து அதிகாலை 2 மணியளவில் அணைக்கப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் சேதம் அடைந்த பெட்டிகளை, தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணி நடப்பதாகவும், அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்யும் பணி நடப்பதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.