விவாகரத்திற்கு ஆதரவு அளிக்கும் வரையில் வீட்டிற்கு திரும்ப மாட்டேன் : லாலு மகன் தேஜ்பிரதாப் யாதவ் அடம்!


விவாகரத்திற்கு ஆதரவு அளிக்கும் வரையில் வீட்டிற்கு திரும்ப மாட்டேன் : லாலு மகன் தேஜ்பிரதாப் யாதவ் அடம்!
x
தினத்தந்தி 9 Nov 2018 12:26 PM GMT (Updated: 9 Nov 2018 1:55 PM GMT)

விவாகாரத்திற்கு ஆதரவு அளிக்கும் வரையில் வீட்டிற்கு திரும்ப மாட்டேன் என லாலுவின் மகன் தேஜ்பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.

பாட்னா, 

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பீகார் எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. பாட்னாவில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் திருமணங்கள் ஆகி 6 மாதங்கள் ஆன நிலையில் விவாகாரத்து கோரி லாலுவின் மகன் தேஜ்பிரதாப் யாதவ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணையை நவம்பர் 29-ம் தேதி பாட்னா குடும்பநல கோர்ட்டு விசாரிக்கிறது.
 
தேஜ்பிரதாப் யாதவ் முடிவு அவருடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் அரசியல் லாபத்திற்காக நான் பலிகடா ஆக்கப்பட்டேன் என்று குற்றம் சாட்டினார். ராஞ்சியில் உள்ள லாலுவை சந்தித்த பின்னர் புத்தகயாவில் தேஜ்பிரதாப் யாதவ் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் அவர், ஹரிதுவாரில் உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. விவாகாரத்து முடிவுக்கு குடும்பத்தார் ஆதரவளிக்கவில்லை என்றால் திரும்ப மாட்டேன் என்று கூறியுள்ளார். 
 
பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவ், தேஜ்பிரதாப் முடிவால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “எங்களுடைய பிரச்சனையை சரி செய்ய முடியாது. என்னுடைய திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே என்னுடைய பெற்றோர்களிடம் வலியுறுத்தினேன். ஆனால் என்னுடைய பேச்சை அவர்கள் கேட்கவில்லை. என்னுடைய பேச்சை அவர்கள் கேட்காத வரையில் நான் எப்படி வீட்டிற்கு திரும்ப முடியும்?” என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.  “என்னுடைய சகோதரன் தேஜஸ்வி யாதவ் பீகாரில் முதல்-அமைச்சர் ஆவார். மகாபாரத போரில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உதவியது போன்று என்னுடைய சகோதரனுக்கு உதவி செய்வேன்” என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே இச்செய்தியை மிகைப்படுத்ததாதீர்கள் என ஊடகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story