ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி சத்தீஷ்காரில் ராகுல் காந்தி பிரசாரம்


ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி சத்தீஷ்காரில் ராகுல் காந்தி பிரசாரம்
x
தினத்தந்தி 9 Nov 2018 2:16 PM GMT (Updated: 9 Nov 2018 2:16 PM GMT)

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.


ராய்பூர், 

 
பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் சத்தீஷ்கார் மாநிலத்தில், வருகிற 12–ந் தேதி மற்றும் 20–ந் தேதி என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு பிரசாரம் செய்தார். ராஜ்நந்தகோன் நகரில் ராகுல் காந்தி பிரசார கூட்டத்தில் பேசுகையில், பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி தொழில் அதிபர்களின் உத்தரவை பெற்று அதன்படியே செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார். 

ராகுல் காந்தி பேசுகையில், பா.ஜனதா போல், பொய் வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன். பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், ஆட்சியை பிடித்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதியை காப்பாற்றினோம்.
அதுபோன்று சத்தீஷ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், 10 நாட்களில் விவசாயியின் கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு போனசும் வழங்கப்படும் என்றார். 


Next Story