டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம்


டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:00 PM GMT (Updated: 9 Nov 2018 8:22 PM GMT)

டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி,

கள்ள நோட்டு மற்றும் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அமல்படுத்தி நேற்று முன்தினத்துடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன.

பிரதமர் மோடியின் இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியில் முடிந்துவிட்டதாக குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் அதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு வெளியே நேற்று போராட்டம் நடத்தினர். இளைஞர் காங்கிரஸ் அமைப்பு நிர்வாகிகள் உள்பட சுமார் 100 பேர், மோடியின் முகமூடிகளை அணிந்துகொண்டும், ரூபாய் நோட்டுகளால் ஆன மாலைகளை அணிந்துகொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பாதுகாப்புபடை வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, குண்டு கட்டாக தூக்கிச் சென்று, பஸ்சில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.



Next Story