தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் கைது + "||" + Man held for extortion by posing as Maoist

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் கைது

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் கைது
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி பள்ளி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஜாம்ஷெட்பூர்,

ஜார்க்கண்டில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் போராஹத் கிராமத்தில் வசிப்பவர் வருண் மஹதோ என்ற துக்கு மஹதோ.  இவர் கரியாமதி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட உதவி ஆசிரியர் ஒருவரிடம் தன்னை மாவோயிஸ்டு என கூறி கொண்டு ரூ.25 லட்சம் பணம் தர வேண்டும்.  அப்படி பணம் தரவில்லை எனில் கொன்று விடுவேன் என்று கேட்டு மிரட்டியுள்ளார்.

கடந்த அக்டோபர் 8ந்தேதி ஆசிரியரின் வீட்டு சுவரில் போஸ்டர் ஒன்றும் ஒட்டியுள்ளார்.  அவரது வீட்டை வெடி வைத்து தகர்த்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.  இதுபோன்று பலரை மிரட்டி பெற்ற ரூ.15 லட்சம் பணத்தில் வீடு ஒன்றும் கட்டியுள்ளார்.

அவர் கடந்த 3 முதல் 4 வருடங்கள் வரை இதுபோன்ற மிரட்டல் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  ஆசிரியர் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடும்ப தகராறில் விபரீதம் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மனைவியை மிரட்ட திராவகம் குடித்த போலீஸ்காரர்
குடும்பத் தகராறில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தனது மனைவியை மிரட்ட போலீஸ்காரர் ஒருவர் திராவகம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. வட்டி கேட்டு மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
திருப்புவனம் அருகே கடன் தொகையை கட்டிய பிறகும், வட்டி பணம் கேட்டு மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
3. காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு
காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. நடிகை மீது திராவகம் வீசுவதாக மிரட்டல்
நடிகை தீபிகா காகர் மீது திராவகம் வீசுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
5. தாய்லாந்து: பபுக் புயல் மிரட்டல் - சுற்றுலா பயணிகள் தவிப்பு
தாய்லாந்தில், பபுக் புயல் காரணமாக சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.