தேசிய செய்திகள்

ஓடும் ரெயிலில் புகை பிடித்ததை கண்டித்த கர்ப்பிணி, கழுத்தை நெரித்து கொலை + "||" + The pregnant woman complained of smoking in the running train, strangled and killed

ஓடும் ரெயிலில் புகை பிடித்ததை கண்டித்த கர்ப்பிணி, கழுத்தை நெரித்து கொலை

ஓடும் ரெயிலில் புகை பிடித்ததை கண்டித்த கர்ப்பிணி, கழுத்தை நெரித்து கொலை
ஓடும் ரெயிலில் புகை பிடித்ததை கண்டித்த கர்ப்பிணி பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
லக்னோ,

பஞ்சாப்-பீகார் இடையே இயக்கப்படும் ஜாலியன்வாலாபாக் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் அருகே சென்று கொண்டு இருந்தது. இந்த ரெயிலில் உள்ள முன்பதிவில்லா பெட்டியில் ஷீனத்தேவி (வயது 43) என்ற கர்ப்பிணி தனது குடும்பத்துடன் பயணம் செய்தார்.


இதே ரெயிலில் பயணம் செய்த சோனு என்பவர் புகை பிடித்தார். இதனை ஷீனத்தேவி கண்டித்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கர்ப்பிணி என்றும் பாராமல் ஷீனத்தேவியை தாக்கியதோடு கழுத்தையும் நெரித்தார். இந்த சம்பவத்தால் ஷாஜகான்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது.

உடனே ஷீனத்தேவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கொலையாளி சோனுவை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நள்ளிரவில், ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண் - போலீசார் காப்பாற்றினர்
விருதுநகர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை போலீசார் காப்பாற்றினர்.
2. வேலை தேடி கோவை வந்த போது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் - அபாய சங்கிலியை இழுத்து நண்பர்கள் மீட்டனர்
வேலை தேடி கோவை வந்த போது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை அபாய சங்கிலியை இழுத்து நண்பர்கள் மீட்டனர்.
3. வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து கர்ப்பிணி தற்கொலை முயற்சி - பெண் குழந்தை இறந்தே பிறந்தது
வரதட்சணை கொடுமை காரணமாக, கர்ப்பிணி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.