விசாரணைக்கு ஆஜராக வந்த ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் ‘திடீர்’ கைது


விசாரணைக்கு ஆஜராக வந்த ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் ‘திடீர்’ கைது
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 8:00 PM GMT)

விசாரணைக்கு ஆஜராக வந்த ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் திடீரென கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி, நிதி நிறுவன அதிபரிடம், 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கியது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகான் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், தங்க கட்டிகள் பெற்ற வழக்கில் ஜனார்த்தனரெட்டியிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதுபோல, விசாரணைக்கு ஆஜராகும்படி அலிகானுக்கும் போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். இதையடுத்து, நேற்று மாலையில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது குற்றப் பிரிவு போலீசார் திடீரென அலிகானை கைது செய்தார்கள்.

அலிகான் வீட்டில் கடந்த 7-ந் தேதி போலீசார் சோதனை நடத்தியபோது, அவர் வீட்டில் இருந்து 5 தோட்டாக்களை கைப்பற்றி இருந்தனர். சட்ட விரோதமாக தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்ததால் தற்போது அலிகான் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story