தேசிய செய்திகள்

தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல்; வீரர் காயம் + "||" + BSF personnel injured in IED blast in C'garh ahead of polls

தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல்; வீரர் காயம்

தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல்; வீரர் காயம்
சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் காயமடைந்து உள்ளார்.
ராய்பூர்,

சத்தீஷ்காரில் நாளை சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது.  அதன்பின் வருகிற 20ந்தேதி 2வது கட்ட தேர்தல் நடைபெறும்.  தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11ந்தேதி வெளிவரும்.  இந்நிலையில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த அங்கு தேர்தலை புறக்கணிக்கும்படி நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய குழு ஒன்று கட்டக்கல் மற்றும் கோம் கிராமங்களுக்கு இடைப்பட்ட வன பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் பணிக்காக இன்று சென்றனர்.

அவர்கள் மீது நக்சலைட்டுகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்துள்ளனர்.  இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ஆய்வாளர் மகேந்திர சிங் என்பவர் காயமடைந்து உள்ளார்.

இதனை அடுத்து கூடுதல் படை அங்கு சென்று காயமடைந்த சிங்கை மீட்டு கொண்டு வந்தனர்.

சத்தீஷ்காரில் கடந்த 15 நாட்களில் நடைபெறும் 4வது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் இதுவாகும்.  இதற்கு முன் நடந்த 3 தாக்குதல்களில் 13 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களில் தேர்தல் பிரசார பணிகளை படம் பிடிக்க சென்ற தூர்தர்சன் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் ஒருவரும் அடங்குவார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள்; நக்சலைட்டுகள் பாதித்த பகுதியை சேர்ந்த பெண் 12வது இடம்
நக்சலைட்டுகள் பாதித்த சத்தீஷ்காரின் தன்டேவாடா பகுதியை சேர்ந்த இளம்பெண் சிவில் சர்வீசஸ் தேர்வில் 12வது இடம் பிடித்துள்ளார்.
2. சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்திய பகுதியில் 77% வாக்கு பதிவு
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்திய பகுதியில் 77% வாக்குகள் பதிவாகி உள்ளன.
3. சட்டீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான என்கவுன்ட்டரில் 4 எல்லை பாதுகாப்பு படையினர் பலி
சட்டீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான என்கவுன்ட்டரில் 4 எல்லை பாதுகாப்பு படையினர் இன்று கொல்லப்பட்டனர்.
4. நக்சலைட்டுகளுடன் துப்பாக்கி சண்டை, குண்டு வெடிப்புக்கு இடையே, சத்தீஷ்கார் முதல் கட்ட தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு
நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டை மற்றும் குண்டு வெடிப்புக்கு இடையே சத்தீஷ்கார் மாநிலத்தில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 70 சதவீத வாக்குகள் பதிவாகின.