தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் மேலும் ஒரு இந்திய வீரர் பலி + "||" + Kashmir border: Pakistani army shoots an Indian soldier

காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் மேலும் ஒரு இந்திய வீரர் பலி

காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் மேலும் ஒரு இந்திய வீரர் பலி
காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் மேலும் ஒரு இந்திய வீரர் பலியானார்.
ஜம்மு,

காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எனவே எல்லையில் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இருப்பினும் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் நேற்று  இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அதே மாவட்டத்துக்கு உட்பட்ட நவுசாரா செக்டர் கலல் என்ற இடத்தில் இன்று பாகிஸ்தான் வீரர்கள், இந்திய வீரர்கள் மீது மீண்டும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இந்திய வீரர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்தியா தரப்பில் பாகிஸ்தான் வீரர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் மக்களுக்கு உதவ ராணுவம் தயாராக உள்ளது - பாகிஸ்தான் ராணுவத் தளபதி
காஷ்மீர் மக்களுக்கு உதவ ராணுவம் தயாராக இருக்கிறது என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவித் பஜ்வா தெரிவித்துள்ளார்.
2. அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி - இந்திய ராணுவம்
அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்தது என இந்திய ராணுவம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
3. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் காயம்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
4. காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள படையினர் தயார் - ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்
காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள படையினர் தயார்நிலையில் இருப்பதாக, ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல் தெரிவித்துள்ளார்.
5. காஷ்மீர் எல்லையில் குண்டு வெடித்து 2 ராணுவ வீரர்கள் காயம்
காஷ்மீர் எல்லையில் நடந்த குண்டு வெடிப்பில், 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.