வாரணாசி கங்கையில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


வாரணாசி கங்கையில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 12 Nov 2018 12:18 PM GMT (Updated: 12 Nov 2018 12:18 PM GMT)

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார்.

வாரணாசி,

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். வாரணாசி கங்கையில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்திய நீர்வழி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி ஹல்தியா-வாரணாசி இடையில் கங்கை ஆற்றில் சுமார் 2 ஆயிரம் எடையுடன் சரக்கு கப்பல்கள் சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்த திட்டம் ஹல்தியா, சாஹிப்கஞ்ச், வாரணாசி ஆகிய பகுதிகளில் சரக்கு முனையங்கள் அமைத்து விரிவுப்படுத்தபடும். உ.பி. முதல்- மந்திரி யோகி ஆதித்யாநாத்  மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர். 

மற்ற நாடுகளை போல நதிகள் வழியாக உள்நாட்டு நீர்வழிபோக்குவரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து துறையின் மைல்கல்லாக கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் எனும் உள்நாட்டு கப்பல் தேசிய நீர்வழி பாதை வழியே பயணித்து கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கி நிதியுதவியுடன் முதற்கட்டமாக 3 இடங்களில் நீர்வழி போக்குவரத்துக்கான முணையம் அமைக்கப்படுகிறது.  வாரணாசியில் ரூ.1,571.95 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.

Next Story