தேசிய செய்திகள்

பா.ஜ.க. மூத்த கட்சி தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு; புகாரை இ மெயிலில் அனுப்பிய பெண் தொண்டர் + "||" + BJP woman worker e-mails to cops sexual harassment complaint against sr party leader

பா.ஜ.க. மூத்த கட்சி தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு; புகாரை இ மெயிலில் அனுப்பிய பெண் தொண்டர்

பா.ஜ.க. மூத்த கட்சி தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு; புகாரை இ மெயிலில் அனுப்பிய பெண் தொண்டர்
பாரதீய ஜனதா மூத்த கட்சி தலைவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு புகாரை பெண் தொண்டர் ஒருவர் இ மெயில் வழியே போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.
டேராடூன்,

உத்தரகாண்டில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக உள்ளவர் சஞ்சய் குமார்.  இவர் மீது பெண் தொண்டர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு புகார்களை தெரிவித்துள்ளார்.  இதுபற்றி தனது கட்சியின் பிற மூத்த தலைவர்களிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த சர்ச்சையை அடுத்து முன்பே கட்சியின் பொது செயலாளர் (அமைப்பு) பதவியில் இருந்து சஞ்சய் விலகி விட்டார்.

இந்த நிலையில் கடந்த 10ந்தேதி காவல் துறைக்கு இ மெயில் வழியே அந்த பெண் தொண்டர் பாலியல் குற்றச்சாட்டு புகாரை தெரிவித்துள்ளார்.

அதில், சில மாதங்களுக்கு முன் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் சஞ்சயை சந்தித்தேன்.  அதன்பின்னர் அவர் என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.  இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு சரிதா தோபல் விசாரணை நடத்தி வருகிறார்.