தேசிய செய்திகள்

கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் + "||" + cyclone Gaza movement slowed by 5 km speed

கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்
கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கஜா புயலானது குறைந்த வேகத்தில் நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது. அதி தீவிர புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெறும். 

சென்னைக்கு கிழக்கே 750 கி.மீட்டர் தொலைவிலும் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. தெற்கு தென்மேற்கு நோக்கி நகரும்  கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே நவம்பர் 15-ல் கடக்க வாய்ப்பு உள்ளது. நவம்பர் 15-ல் வட தமிழகம், தென் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழக பட்ஜெட்; கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தர ரூ.1,700 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் மத்திய , மாநில அரசு பங்களிப்புடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தரப்படும். இதற்கு ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். #TNBudget
2. தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் 338 அரசு பள்ளி, அங்கன்வாடி, ஊராட்சி அலுவலக கட்டிடம் சேதம் - சீரமைக்க, அரசுக்கு பரிந்துரை
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் 338 அரசு பள்ளி, அங்கன்வாடி, ஊராட்சி அலுவலக கட்டிடம் சேதம் அடைந்துள்ளன. இதனை சீரமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
3. நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரெயிலில் சரக்கு கட்டணம் இல்லை - ரெயில்வே நிர்வாகம்
கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரயிலில் சரக்கு கட்டணம் இல்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4. நவ.30 மற்றும் டிச.1 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
5. ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்கள் 46 பேருக்கு ரூ.10¾ லட்சம் நிவாரண உதவி - அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்கள் 46 பேருக்கு ரூ.10¾ லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.