வருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச.4 ஆம் தேதி விசாரணை


வருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச.4 ஆம் தேதி விசாரணை
x
தினத்தந்தி 13 Nov 2018 7:59 AM GMT (Updated: 13 Nov 2018 7:59 AM GMT)

வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சோனியா, ராகுல் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு 2011-12-ம் ஆண்டுக்கான வருமான வரி மறுமதிப்பீடு கணக்கை தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ஐகோர்ட்டின் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோர் கொண்ட அமர்வு, வருமான வரித்துறைக்கு இதற்கான அதிகாரம் உள்ளது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோல காங்கிரஸ் முன்னணி தலைவர் ஆஸ்கர் பெர்னான்டசின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

டெல்லி ஐகோர்ட் தீர்ப்பை எதிர்ப்பு ராகுல் காந்தி, சோனியா காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

முன்னதாக, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் முன் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஏற்கனவே கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story